The Indian Times

ரேணிகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் காலமானார்!

ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமான குணசித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் என்றழைக்கப்படும் கார்த்திக் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணத்தால் காலமானார். ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தென்மேற்கு பருவக்காற்று , நீர்ப்பறவை , பில்லா 2 , கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா என்று பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் தீப்பெட்டி கணேசன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் படவாய்ப்புகள் குறைந்து போனதால் வறுமையில் வாடினார் தீப்பெட்டி கணேசன்.

Advertisement

சிறிது காலம் சினிமாவை தவிர்த்து மற்ற வேலைகளுக்கும் சென்றுள்ளார் இவர். கொரோனாவின் லோக்டவுன் காலத்தில் பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லை, என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சமீபத்தில் அவரது மனக்குமுரல்களை வெளிப்படுத்தியிருந்தார் தீப்பெட்டி கணேசன். இதை பார்த்த கவிஞர் சினேகன் அவருக்கு உதவி செய்திருந்தார். இதை தொடர்ந்து வறுமையில் வாடி வந்த தீப்பெட்டி கணேசன் நேற்று உடல்நலக்குறைவு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதற்க்கு திரையுலகில் பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in