ரசிகர்களிடம் டெலிவரி ஆகியதா திருச்சிற்றம்பலம்..திரை விமர்சனம் (?/5)

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.

ரசிகர்களிடம் டெலிவரி ஆகியதா திருச்சிற்றம்பலம்..திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்கில் கர்ணன் படம் வெளியாகியது.இந்நிலையில் சுமார் 1 ஆண்டுகளுக்கு மேல் தனுஷ் படம் திரையரங்கில் ஏதும் வெளியாகவில்லை.தற்போது இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ளார் திருச்சிற்றம்பலம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.தனுஷ் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படமாகும்.இதற்கு முன்னாள் நடித்த குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் பெரும் ஹிட் அடித்தது.இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.இப்படத்தில் நித்யா மேனன்,ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகளாக நடித்துள்ளனர்.பாரதி ராஜா பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் டெலிவரி ஆகியதா திருச்சிற்றம்பலம்..திரை விமர்சனம் (?/5) 2

விளம்பரம்

படத்தின் கதை

படத்தில் திருச்சிற்றம்பலமாக வரும் தனுஷ் தனது அப்பா பிரகாஷ் ராஜிடம் ஒரு விபத்தினால் ஏற்பட்ட பிரச்சினையினால் 10 வருடமாக பேசாமல் உள்ளார் தனுஷுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரது தோழி ஷோபனவாக வரும் நித்யா மேனனும் அவரது தாத்தா பாரதி ராஜாவும் தான்.உணவு டெலிவரி வேலை செய்யும் தனுஷ் ஒருநாள் உணவு டெலிவரி செய்ய தன்னுடன் பள்ளி வயதில் தான் ஒருதலையாக காதலித்த ராஷ்மிக்காவை சந்தித்து காதல் வயப்படுகிறார்.அவரிடம் நன்கு பழகி தனது காதலை கூறவே அவர் ஏற்க மறுக்கிறார்.இந்நிலையில் சோகத்தில் இருக்கும் தனுஷுக்கு இரண்டாவது முறையாக பிரியா பவானி சங்கர் மீது காதல் வருகிறது.உறவினர் திருமணத்திற்கு சென்ற பொழுது பிரியா பவானி சங்கரை சந்திக்கின்றார்.அவரிடம் தனது காதலை கூறவே அவரும் மறுத்துவிடுகிறார்.இதனால் பெரும் துயரத்தில் இருக்கும் தனுஷிடம் தாத்தா பாரதி ராஜா உன்னுடவே இருக்கும் ஷோபனாவை காதலி என ஐடியா கொடுக்கவே அதை பின்பற்றி ஷோபனவாக வரும் நித்யா மேனனை காதலிக்கிறார் ,இறுதியில் என்ன ஆகியது ஷோபனவாச்சும் திருச்சிற்றம்பலத்தின் காதலை ஏற்றாரா,அப்பா பிரகாஷ் ராஜ் மேல் இருந்த கோபம் தனுஷுக்கு தணிந்ததா என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்

ரசிகர்களிடம் டெலிவரி ஆகியதா திருச்சிற்றம்பலம்..திரை விமர்சனம் (?/5) 3

படத்தை பற்றிய அலசல்

விளம்பரம்

வழக்கம் போல தனுஷ் நடிப்பில் அசத்தியுள்ளார்.தாத்தாவாக பாரதிராஜா வாழ்ந்து தனது அனுபவ நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ் கண்டிப்பான அப்பாவாக சிறப்பாக நடித்துள்ளார்.நித்யா மேனனை போல நமக்கு ஒரு தோழி இல்லை என்று ரசிகர்கள் சோகமாகும் அளவிற்கு பிரமாதமாக நடித்து அசத்தி இருக்கிறார்,சிறிது நேரமே வந்தாலும் ராஷி கண்ணா மற்றும் ப்ரியா பவானி சங்கர் தங்களது நடிப்பில் சிறந்து விளங்கி உள்ளனர்.படத்திற்கு கதாபாத்திரம் பொருந்திய நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது

ரசிகர்களிடம் டெலிவரி ஆகியதா திருச்சிற்றம்பலம்..திரை விமர்சனம் (?/5) 4

படத்தின் விமர்சனம்

படத்தினை பார்க்கும் பொழுது இன்னும் சிறப்பாக கதையை வடிவமைத்திருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது.தற்போது இரண்டு மணி நேரம் இப்படம் ஓடினாலும் , படத்தின் கதையை சிறப்பாக்கி இன்றும் கொஞ்ச நேரம் அதிகரித்து இருந்தால் நிச்சயம் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.அனைத்து நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களாக மாறி நடித்திருப்பது படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளது.நடிகர்கள் அனைவரும் தங்களது முழு நடிப்பினையும் கொடுத்துள்ளனர்.தனுஷ் வழக்கம் போல இப்படத்தில் தனது சிறப்பினை விட அதிகம் தான் கொடுத்துள்ளார்.அனிருத்தின் பாடல் மற்றும் இசை படத்திற்கு அதிகளவு வலு சேர்த்துள்ளது.வசனங்கள் அற்புதமாக இருந்தாலும் நகைச்சுவைகள் சில இடங்களில் வேலை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.படத்தின் திரைக்கதையை இயக்குனர் ஜவஹர் சிறப்பாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்கூறியது.படத்தில் சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும் அதனை சுமந்து சென்று மக்களை மகிழ்விக்கிறார் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் அளிக்கும் ரேட்டிங் – 2.7/5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment