தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர் அருள்நிதி.ஏனெனில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும்.இதுதான் இவரின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.இவருக்கு அண்மையில் வெளியாகிய டைரி என்ற படம் சூப்பர் ஹிட் அடித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் ஹரிஷ் இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் பாரதிராஜா மற்றும் கதாநாயகியாக ஆத்மீகா நடித்துள்ளார்கள்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தின் முழு விமர்சனத்தினை கீழே காணலாம்.
படத்தின் கதை
படத்தில் வாய்பேச முடியாதவராக வருகிறார் அருள்நிதி,தனது தந்தை பாரதிராஜா உடன் இணைந்து கன்ஸ்டரக்சன் வேலைகளை செய்து வரும் அருள்நிதிக்கு தனது அத்தை மகள் ஆத்மீகா உடன் திருமணம் நடைபெற உள்ளது.இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தலையில் அடிபடவே அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார் அருள்நிதி.அங்கு ஏற்படும் சில பிரச்சினைகளினால் பாரதிராஜாவுக்கு போலி மருந்துகளை செலுத்திவிடுகின்றனர்.இறுதியில் பாரதிராஜா உயிர் பிழைத்தாரா,இதற்கு யார் காரணம்,காரணமானவர்களை அருள்நிதி என்ன செய்தார் என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்து கலக்கி உள்ளார் என்று தான் கூறவேண்டும்.தனது கண்களால் படம் முழுவதும் பேசி மிரட்டியுள்ளார் அருள்நிதி.இப்படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு நல்ல நடிகர் என்பதை உணர்த்திவிட்டார் பாரதி ராஜா.இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் பாரதி ராஜா.கதாநாயகி ஆத்மீகா கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியமும் கொடுக்கவில்லை.இது பெரிய நடிகர்களின் படங்களில் தான் நடக்கும் என்று பார்த்தால் தற்போது அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடக்க தொடங்கிவிட்டது.ட்ரைலரை பார்க்கும் பொழுது அரசு மருத்துவமனையில் நடப்பதை எடுத்துள்ளதாக தெரிந்தாலும் இறுதியாக யாரும் எதிர்பார்க்காமல் வேறு கதையை இயக்குனர் கூறியுள்ளது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளில் இசையமைப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்றவைக்கின்றது.படத்தில் நல்ல கதை இருந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாதது பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது.மொத்தத்தில் திருவின் குரல் இன்னும் அதிகமாக ஒலித்திருக்கலாம்.
திருவின் குரல் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in