தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.ரசிகர் மன்றத்தினை அஜித் கலைத்தாலும் படம் வெளியாகும் நாளை திருவிழா போல கொண்டாடுவது இவர் ஒருத்தருக்கு மட்டுமே இருக்கும்.தற்போது அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் இப்படத்தினை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தினை வெளியிட்டுள்ளது வெளிநாட்டில் லைக்கா நிறுவனம் படத்தினை வெளியிட்டுள்ளது.அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறியிருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.
படத்தின் கதை
மக்கள் அதிகளவு கூடும் இடத்தில் தனியார் வங்கியை ஒரு கூட்டம் கொள்ளையடிக்க முயல்கிறது.கொள்ளையர்கள் உள்ளே நுழையவும்,ஏற்கனவே இந்த வங்கியை கொள்ளையடிக்க மஞ்சு வாரியார் உடன் அஜித் வாடிக்கையாளராக உள்ளே இருக்கிறார்.இந்நிலையில் கொள்ளையர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அஜித் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.போலீசும் மற்றும் அரசும் அஜித்தை பிடிப்பதற்கு களம் இறங்குகிறது,அஜித் போலீஸ் கையில் சிக்கினாரா? ஏன் வங்கியை கொள்ளையடிக்க வந்தார்? என்பதை சோசியல் கருத்து உடன் மீதி கதையாக கொண்டு வந்துள்ளனர்.
படத்தின் விமர்சனம்
வெள்ளை நிற உடை, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தாறுமாறாக என்ட்ரி கொடுக்கிறார் தல அஜித். மங்காத்தா படத்திற்கு பிறகு ஒரு தரமான வில்லனாக நடித்துள்ளார். வங்கியை கொள்ளையடிக்க வந்த அஜித்,ஜாலியான வில்லனாகவும், வங்கிக்குள் நடனமாடுவதும் சாதாரண ரசிகர்களை கூட எழுந்து கை தட்ட வைக்கின்றது என்றே கூறலாம்.தனி ஒரு மனிதனாக மொத்த படத்தையும் தாங்கி இருக்கிறார் அஜித் என்றே கூற வேண்டும்.ஜிப்ரானின் பாடல்கள் ஓகே மற்றும் பின்னணி இசை தாறுமாறாக உள்ளது.கதாநாயகியாக வரும் மஞ்சு வாரியார் அதிரடியில் அழுத்தம் கொடுக்கிறார்.மேலும் படத்தில் நடித்த தர்ஷன், ஜி.எம்.சுந்தர், சமுத்திரகனி, ஜான்கொக்கேன், ‘பக்ஸ்’ பகவதி, அஜய் ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்துள்ளனர்.படத்தில் வினோத் சொல்ல வந்திருக்கும் கருத்து முக்கியமானதாக அமைந்துள்ளது.படத்தின் முதல் பாதி தோட்டாக்கள் தெறிக்க மாஸாக இருந்தாலும் போக போக துப்பாக்கி சத்தம் பார்ப்பவர்களை எரிச்சலூட்டுகிறது. இரண்டாவது பாதியில் அஜித் யார் என்று கூறும் கதை படு சுமாராக உள்ளது.கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அதிக ஆக்சன் ஒருகட்டத்திற்கு மேல் தெவிட்டலை ஏற்படுத்துகிறது.ஜிப்ரானின் பாடல்கள் நன்றாக உள்ளது இருப்பினும் தேவையில்லாத இடங்களில் பாடல்களை திணித்தது போல உள்ளது,பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தினை தூக்கி நிறுத்தியுள்ளது.மொத்தத்தில் நல்ல கருத்தை மாஸ் ஹீரோ துணிவுடன் கூறியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது
துணிவு படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in