பாக்ஸ் ஆபிஸை உடைத்து எறியும் திருச்சிற்றம்பலம் 2 நாள் மொத்த வசூல்

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாக்ஸ் ஆபிஸை உடைத்து எறியும் திருச்சிற்றம்பலம் 2 நாள் மொத்த வசூல் 1

விளம்பரம்

தற்போது யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியாகிய குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களும் அதிகளவு இருந்தது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நித்யா மேனன்,ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

பாக்ஸ் ஆபிஸை உடைத்து எறியும் திருச்சிற்றம்பலம் 2 நாள் மொத்த வசூல் 2

விளம்பரம்

மேலும் வசூலிலும் நல்ல சாதனைகளை பெற்று வருகிறது.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் திரையரங்குக்கு சென்று படங்களை பார்த்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அடுத்தடுத்து வரும் நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரசிகர்கள் படத்திற்கு அதிகம் செல்லும் பட்சத்தில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.சன் பிக்சருக்கு சமீப காலமாக வெளியாகிய படங்கள் பெற்றுத்தராத வசூலை இப்படம் பெற்றுத்தருகிறது என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment