நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடிப்பில் பிச்சு உதறும் த்ரிஷாவுக்கு குந்தவை கதாபாத்திரம் சரியாக இருக்கும்.மேலும் குந்தவையாக த்ரிஷாவை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் உள்ளனர்.தற்போது குந்தவை கெட்டப்பில் நடிகை த்ரிஷா போலவே அவரது ரசிகை எடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதில் நடிகை த்ரிஷா போலவே அச்சு அசல் அவர் உள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியமாக த்ரிஷாவை பார்த்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in