சரத்குமாரை தாத்தா என மேடையில் கூறிய திரிஷா…

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சரத்குமாரை தாத்தா என மேடையில் கூறிய திரிஷா... 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

சரத்குமாரை தாத்தா என மேடையில் கூறிய திரிஷா... 2

விளம்பரம்

இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார்.நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய திரிஷா திடிரென நடிகர் சரத்குமாரை தாத்தா மேடைக்கு வாங்க என அழைத்துள்ளார்.இது அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது.ஆனால் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவர் அழைத்துள்ளதால் என தெரியவந்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment