பிரபல YOUTUBER TTF வாசன் நடிக்கும் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

பிரபல YOUTUBER TTF வாசன் நடிக்கும் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 1

விளம்பரம்

யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் பிக் பாஸ் அர்ச்சனாவின் தாறுமாறான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பிரபல YOUTUBER TTF வாசன் நடிக்கும் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று டிடிஎப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் மஞ்சள் வீரன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.நெட்டிசன்கள் பலரும் இவரை கலாய்த்தும் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment