பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்துள்ளார். விஜய்க்கு ஆரம்பத்தில் அனுமதி தாமதமாக கொடுக்கப்பட்ட நிலையில், அவர் ஊருக்குள் செல்ல அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் மண்டபத்திலும் வைத்து மக்களை சந்திக்க கூடாது என கூறி, வேனில் இருந்து மக்களை பார்க்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பேசிய அவர், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பதிலாக வேறு எங்காவது அமைக்கவேண்டும். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விவசாயிகள் பாதிக்கும்படி எதுவும் நடக்க கூடாது. இத்தனை நாட்கள் பரந்தூர் மக்களை சந்திக்க தான் காத்து இருக்கிறேன். விமான நிலையத்தை வைத்து,திமுக லாபம் பார்க்க இருப்பதாகவும் விஜய் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in