ஆனால் மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், மெட்ரோ சுரங்க பாதைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்வபோது வீடியோ வெளியிட்டு வரும் தமிழக மாணவர்கள் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்றும் சாப்பாடு குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். இதை டிவியில் பார்த்த சசிகலா மற்றும் சங்கர் தங்கள் மகனுக்கு அவ்வபோது வீடியோ கால் செய்து பேசி வந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற சூழலில் தன் பிள்ளை மாட்டிக் கொண்டானே என எண்ணி தினம் வேதனையில் இருந்துள்ளார் சசிகலா. Youtube Video Code Embed Credits: Puthiyathalaimurai
Ukraine war இந்த நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதனால் மகன் சக்திவேல் வீடியோ கால் மூலம் தன் தாயின் இறுதி சடங்கை பார்த்து கதறி அழுதார். தன்னால் வர முடியாத சூழலில் தன்னை நினைத்து வருந்தி தாய் உயிரை விட்டதை நினைத்து அவர் பெரிதும் கலங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நமக்காக துடிக்கின்ற ஒரு உண்மையான இதயம் அம்மா மட்டுமே என்பதை சசிகலா இந்த உலகிற்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in