21 வருடங்களுக்கு பிறகு BIGGBOSS ஆரவ் நடிப்பில் மீண்டும் வந்த “வா அருகில் வா”… ட்ரைலர் இதோ

பிரபல மாடல் ஆக இருந்தவர் ஆரவ்.இவருக்கு பிக் பாஸ் முதல் சீசனில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மிகப்பிரபலம் ஆகலாம் என எண்ணி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.தன்னுடைய முழு திறமையையும் காண்பித்து பல ரசிகர்களை கவர்ந்தார் ஆரவ்.மேலும் தனது கடின உழைப்பால் 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதல் சீசனில் டைட்டில் வின்னராகவும் மாறினார்.இவரின் வெற்றி இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

21 வருடங்களுக்கு பிறகு BIGGBOSS ஆரவ் நடிப்பில் மீண்டும் வந்த "வா அருகில் வா"... ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு ஆரவ் படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகனாக உருவெடுத்தார்.மார்க்கெட் ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இந்நிலையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.இப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

21 வருடங்களுக்கு பிறகு BIGGBOSS ஆரவ் நடிப்பில் மீண்டும் வந்த "வா அருகில் வா"... ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

தற்போது ஆரவ் இயக்குனர் ஜெய ராஜேந்திர சோழன் இயக்கத்தில் மீண்டும் வா அருகில் வா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் குக் வித் கோமாளி புகழ் சந்தோஷும் நடித்துள்ளார்.விவேக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.முழுக்க முழுக்க திகிலுடன் கூடிய பேய் படமாக உருவாகியுள்ளது இப்படம்.ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு வெளியாகிய வா அருகில் வா படம் மாபெரும் வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் பெயரை கொண்டு அடுத்தபடம் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits : DIVO MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment