வாரிசுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வாத்தி… 8 நாட்களில் வசூலை கோடிகளில் அள்ளி குவித்த தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,ஆங்கிலம் என பல மொழி சினிமாவிலும் கலக்கி வருபவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது,அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.கோலிவுட்டில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை இவரது கொடி பறக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் தனுஷின் கடின உழைப்பு தான்.ஒரே நேரத்தில் அனைத்து மொழி சினிமாவிலும் கலக்கி வருகிறார் தனுஷ் என்று கூறினால் மிகையாகாது

வாரிசுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வாத்தி... 8 நாட்களில் வசூலை கோடிகளில் அள்ளி குவித்த தனுஷ் 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.நல்ல கருத்துக்களை படம் கூறியுள்ளதாக கூறி ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தினை கண்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் வாத்தி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வாத்தி... 8 நாட்களில் வசூலை கோடிகளில் அள்ளி குவித்த தனுஷ் 2

விளம்பரம்

அதன்படி தற்போது இப்படத்தின் 8 நாட்கள் மொத்த வசூலை படக்குழு அறிவித்துள்ளது.அதன்படி வாத்தி படம் உலகம் முழுவதும் சுமார் 75 கோடி வசூலை பெற்றுள்ளது.இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் மற்றும் ஆந்திராவில் 25 கோடி வசூலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி ஆந்திராவில் வாரிசை விட அதிகம் வசூலை பெற்று முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.நிச்சயம் இது தனுஷ் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “வாரிசுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வாத்தி… 8 நாட்களில் வசூலை கோடிகளில் அள்ளி குவித்த தனுஷ்”

Leave a Comment