நடிகர் தனுஷ் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,ஆங்கிலம் என பல மொழி சினிமாவிலும் கலக்கி வருபவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது,அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.இவர் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் விமர்சையாக காணலாம் வாருங்கள்
படத்தின் கதை
சமுத்திரக்கனியின் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் தனுஷ்,இவருடன் சேர்த்து பல துணை ஆசிரியர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க அனுப்புகிறார் சமுத்திரக்கனி.இவர்களை வெளிப்பார்வைக்கு பாடம் அனுப்புவதற்கு அனுப்பினாலும் இவர்களால் அரசு பள்ளி முன்னேறப்போவதில்லை என்ற எண்ணத்தில் தான் துணை ஆசிரியர்களை அனுப்பிவைக்கிறார்.அதன்படி தனுஷ் சோழவரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கணக்கு வாத்தியாராக செல்கிறார்,அங்கு நாயகி சம்யுக்தாவை கண்டு காதல் வயப்படுகிறார்.பின்னர் பள்ளிக்கு செல்லும் தனுஷுக்கு பெரும் அதிர்ச்சி காத்துள்ளது.ஊரில் உள்ள மாணவர்கள் பலரும் 10 முடித்துவிட்டு கூலி வேலை செய்வதை கண்டு தனுஷ் அதிர்ச்சியடைகிறார்.தனுஷ் இதை மாற்ற எண்ணி வேலைக்கு செல்லும் மாணவர்களை படிக்க வைத்து நல்ல மதிப்பெண்களை எடுக்க வைக்கிறார்.இது சமுத்திரக்கனிக்கு தெரியவரவே செம்ம கடுப்பாகிய சமுத்திரக்கனி தனுஷை எச்சரிக்கிறார்.நான் கல்வியை தனியார் பள்ளி மூலம் வியாபாரம் செய்து வருகிறேன் அதே நேரத்தில் நீ அரசு பள்ளி மாணவர்களை நல்ல மதிப்பெண்கள் எடுக்கவைத்து என் வியாபாரத்தை கெடுக்க பார்க்கிறாயா என தனுஷை பார்த்து கூறுகிறார்.இதையெல்லாம் கண்டுகொள்ளாத தனுஷ் மிரட்டலாக பன்ச் வசனம் பேசி மாணவர்களை படிக்க வைப்பேன் என்று சவால் விடுகிறார்,இந்த சவாலை தனுஷ் வெற்றிபெறாமல் தடுக்க சமுத்திரக்கனி என்ன செய்தார்,சவாலில் தனுஷ் வெற்றிபெற்றாரா என்பதே மீதி படத்தின் கதை ஆகும்.
படத்தின் விமர்சனம்
கதையின் நாயகனாக வரும் தனுஷ் உண்மையிலேயே கல்வியை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பாடத்தினை புகட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.தனது நடிப்பினால் மொத்த படத்தினையும் ஒத்த ஆளாக தாங்கி நிற்கிறார் தனுஷ். படிப்பு தான் மரியாதை தரும் என உணர்த்த தனுஷ் படும்பாடு அவர் மீது அதிக நேசத்தை ரசிகர்களிடம் விதைக்கிறது.இது முதல் தமிழ் படம் கதாநாயகி சம்யுக்தாவுக்கு என்று சொல்ல முடியாதவண்ணம் பட்டையை கிளப்பி ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தார்.வில்லனாக சமுத்திரக்கனி தனது உச்ச நடிப்பை திரையில் காண்பித்து அனல்பறக்க வசனங்கள் பேசி தனித்துவமாக தெரிகிறார்.பெற்றோர்கள் மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்தால் தான் நன்றாக படிப்பார்கள் அரசு பள்ளியில் படித்தால் படிக்கமாட்டார்கள் என்று நினைக்கும் கருத்தினை இப்படத்தின் இயக்குனர் வெங்கி முழுவதும் மாற்றியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.படம் நல்ல கருத்துக்களை கூறினாலும் திரைக்கதையில் சில தொய்வு உள்ளது மேலும் படத்தின் நீளம் குறைவு அதுமட்டுமில்லாமல் படம் மெதுவாக சில இடங்களில் நகர்வது படத்தின் முக்கிய குறை என்று கூறலாம்.ஜிவி பாடல்கள் வா வாத்தி பாடலை தவிர எந்த பாடலும் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,படத்தின் பிண்ண்னி இசையில் தனது மொத்த பலத்தையும் காட்டியுள்ளார் ஜிவி பிரகாஷ்.மொத்தத்தில் இப்படம் ஒரு முக்கியமான கருத்தை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லிவிட்டார்களோ என்று சொல்வதை போல உணர செய்கிறது.
வாத்தி படத்திற்கு இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in