பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX... ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா...வீடியோ வெளியிட்ட மாதவன்

பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இது போக கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி தக்ஷா ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் உலக சாதனை படைத்தார். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

விளம்பரம்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த ஒரு பெரிய அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிட்டு வந்தனர். இதை தொடர்ந்து தற்போது கோவில் பூசாரி ஒருவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment