நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.
பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.அதன்படி தற்போது விக்ரமனை பற்றி பேசியுள்ளார் வனிதா
விக்ரமனுக்கு பிரபல அரசியல் தலைவர் ஒருவர் ஒட்டு போட வேண்டும் என ஆதரவாக பேசியிருந்தார்.இதனால் முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான வனிதா இதற்கு கொதித்தெழுந்துள்ளார்.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது,கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிக்பாஸில் விக்ரமனுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் கூறியுள்ளார்.இது ஒரு அரசியல் ஸ்டண்ட்,எப்படி ஒரு அரசியல் வாதி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஓட்டு போடுங்கள் என தனது கட்சிக்காரருக்கு ஆதரவாக கூறலாம்,விக்ரமன் வெற்றிபெற்றால் வெறும் அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவினால் தான் உண்மையான வெற்றி இல்லை என கொந்தளித்துள்ளார்.
View this post on Instagram
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in