தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு . ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக படக்குழு நடத்தி வருகிறது.சரத்குமார்,ஷியாம்,தளபதி விஜயின் அப்பா மற்றும் அம்மா,கதாநாயகி ராஷ்மிக்கா ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தமன் கூறியதாவது,வாரிசுக்கு இசையமைத்து கீ போர்டே உடைந்துவிட்டது. ஆதார் கார்டு போன்றது தளபதி படத்தின் இசை அவ்வளவு முக்கியமானது,இந்தியாவிற்கு ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே போல விஜய் படத்திற்கு இசையமைப்பது முக்கியம் என கூறியுள்ளார்.பின்னர் பேசிய நடிகர் விடிவி கணேஷ் கூறியதாவது,விஜயிடம் இருந்து ஒழுக்கத்தினை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.பின்னர் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு,அவர் பேசுவதற்குள் ரசிகர்கள் நம்பர் 1 நம்பர் 1 என கூச்சலிட,உடனே அவர் விஜய் தான் நம்பர் 1 ,இந்த படம் அனைத்து பெற்றோர்களுக்கும் சமர்ப்பணம்,விஜயின் பெற்றோர்களுக்கும் கூடத்தான் என கூறியுள்ளார்.
பின்னர் பேசிய ராஷ்மிக்கா மந்தனா ,நான் கில்லி படத்தின் முதல் காட்சி பார்த்தேன்,அன்றிலிருந்து இன்று வரை நான் தளபதி ரசிகை,படத்துல நிறைய காமெடி காட்சிகள் இருக்கு,நீங்கள் நன்றாக ரசிப்பீர்கள் என கூறியுள்ளார்.பின்னர் பேசிய சரத்குமார்,சூரியவம்சம் படத்தின் 175வது நாள் விழாவில்.விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றேன்,தற்போது அவர் தான் சூப்பர் ஸ்டார் ஆக உள்ளார் என கூறியுள்ளார்.அடுத்ததாக பேசிய பிரகாஷ் ராஜ்,நான் தான் இப்படத்தின் வில்லன்,14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளோம்.படப்பிடிப்பில் விஜய் என்னிடம் வந்து செல்லம் இந்த கண்ணை பக்கத்துல பார்த்து எவ்வளவு நாளாச்சு என கேட்டார்,நான் விஜயின் ரசிகன் என கூறியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in