தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளத்திலும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது,அதையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பாதையில் சரியாக பயணித்து வெற்றியை தனது வசம் ஆக்கினார் மேலும் தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தில் ராஜு இப்படத்தினை தயாரித்துள்ளார் ,தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.அதிகாலை நான்கு மணி முதல் படத்தினை திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படம் நாளா பக்கமும் அடிவாங்கிட்டு,மொக்கையான வில்லன கூட்டி வந்து அவருக்கூட விஜய் சண்டை போடுறாரு,அப்படி இவரு சண்டை போட்டா என்ன போடலைன்னா என்ன ,படத்துல பல காட்சிகள் முதலிலையே கணிக்க முடியிற அளவுக்கு இருக்கு.ஆரம்பத்துலயே தொண்டையை கவ்விட்டு இந்த படம்,இது ஒரு டப்பிங் செய்யப்பட்ட மெகா சீரியல் என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Embed video credits : TAMIL TALKIES
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in