புதிய தலைமுறையில் வேலை பார்த்து வந்தவர் தான் வசந்த். அடிப்படையில் நிரூபரான இவர் தனியார் தொலைக்காட்சிகளில் வேலை பார்த்து வந்தார். படித்து முடித்த உடனேயே நல்ல வேலை, நல்ல சம்பளம், பிறகு திருமணம் என்று வாழ்க்கை நம்மை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தி கொண்டே செல்லும். நம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதாவது சாதித்து விடமாட்டோமா என்கிற ஆவல் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் சிலர் நாம் ஏன் ஒருவருக்கு கீழே வேலை செய்ய வேண்டும்? நாம் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பர். சிலருக்கு அந்த வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கும் பட்சத்தில் அதை திறம்பட செய்து வாழ்க்கையில் ஜொலித்துக் கொண்டு உள்ளனர். இன்று நம் கண் முன்னே இருக்கும் அனைத்து தொழிலதிபர்களும் ஆரம்பத்தில் சின்ன தொழிலாக ஆரம்பித்து இன்று ஒரு சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படி தனது லட்சியத்தை நோக்கி ஓடிய ஒருவர்தான் வசந்த் சுப்பிரமணியம். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு அந்த வேலை வேண்டாம் என உதறிவிட்டு ஹோட்டல் தொழிலை தொடங்கியுள்ளார். மிகவும் சிறிய கடையாக ஆரம்பித்துள்ள இந்த கடையில் இவரும் இவரது மனைவியும் இணைந்து சென்னை முகப்பேர் பகுதியில் கறி இட்லி என்ற புதுவித உணவை அறிமுகப்படுத்தயுள்ளனர். நயம் கறி இட்லி என்று பெயரிடப்பட்ட அந்த கடையில் ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த வியாபாரம் தற்போது நன்றாக சூடு பிடிக்கத் தொடங்கயுள்ளதாக அவரே கூறுகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ஒரு தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆசை தனக்குள்ளே இருந்து கொண்டிருந்ததாக அவர் கூறினார். Youtube Video Code Embed Credits: Behindwoods
இந்த ஹோட்டல் குறித்து வசந்த் கூறியதாவது AC அறையில் அமர்ந்து கொண்டு ககை நிறைய சம்பளத்துடன் இருந்த வேலையை விட்டுவிட்டு கையில் இருந்த குறைந்த அளவு பணத்தைக் கொண்டு மனைவி மற்றும் நான் மட்டுமே இந்த கடையை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் மிகுந்த கஷ்டப்பட்டோம். கொரோனா காலத்தில் கடையை நடத்துவதில் மிகுந்த சிரமம் இருந்தது தற்போது பராவயில்லை என்று சிரித்தபடியே கூறுகிறார் வசந்த். இவரது கடையில் கறி இட்லி, கறி தோசை, வாழையிலை பரோட்டோ, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா என்று அனைத்துமே புதுவிதமாக செய்து அசத்துகிறார் வசந்த். நீங்களும் அந்த வீடியோவைக் காண.. Watch the Below Video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in