விடுதலை பாகம் 1 – திரை விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் விடுதலை பாகம் 1.இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார்.கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கவுதம் மேனன்,சேத்தன் என பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படம் தற்போது முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.இப்படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.

விடுதலை பாகம் 1 - திரை விமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை :

அரசாங்கம் மலை பகுதியில் வாழும் மக்களின் இடத்தில் சுரங்கத்தினை தோண்ட முடிவெடுக்கிறது.இதனை தடுக்க பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுக்கிறார்.அரசாங்கத்தை எதிர்த்து போராடி மக்கள் படை என்ற ஒன்றை உருவாக்குகிறார்.இந்த போராட்டத்தினால் சுரங்கம் தோண்டும் முயற்சி அரசால் கைவிடப்படுகிறது.இந்நிலையில் விஜய் சேதுபதியை பிடிக்க போலீசார் 25 ஆண்டுகளாக போராடி வந்தும் அவர்களால் பிடிக்க முடியவில்லை,இதற்காக சிறப்பு படை போலீசாரை உருவாக்குகின்றனர்.இதில் வந்து இணைபவர் தான் சூரி.ஆரம்பத்தில் சிறிய சிறிய வேலைகளை போலீசில் செய்து வரும் சூரிக்கு பெரியதாக எதையாவது சாதிக்க வேண்டும் என வெறி உள்ளது.அதற்காக போராடியும் வருகிறார் சூரி.இதற்கிடையில் கிராமத்து பெண் ஆக வரும் பவானி ஸ்ரீ இடம் காதலும் கொள்கிறார்.இப்படி ஒரு பக்கம் கதை நகர ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி இருக்கும் இடத்தை பார்த்துவிடுகிறார் சூரி.இதனை உயர் அதிகாரியிடம் சொல்ல போராடுகிறார் இறுதியாக உயர் அதிகாரியாக வரும் கவுதம் மேனனிடம் கூறுகிறார்.25 வருடம் போலீசால் பிடிக்க முடியாமல் திணறும் விஜய் சேதுபதியை சூரி பிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை ஆகும்.

விளம்பரம்

விடுதலை பாகம் 1 - திரை விமர்சனம் 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

தனது கதை மற்றும் தனது இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ஒருபொழுது கெடுத்ததில்லை இயக்குனர் வெற்றிமாறன் என்று தான் சொல்ல வேண்டும்.சிறந்த திரைக்கதையை இப்படத்தில் கையாண்டு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும் படத்தின் திரைக்கதை நம்மளை சோர்வடைய செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகள் ,பெண்களை துன்புறுத்தும் காட்சிகள் எல்லாம் இதயத்தில் வலியுடன் ஒரு இடத்தினை பிடித்துக்கொள்கிறது.வசனங்கள் அனைத்தும் படத்தினை உயர கொண்டு செல்கிறது.கதையின் நாயகனாக வரும் சூரி தனது எதார்த்த நடிப்பினால் கைத்தட்டல்களையும் விசிலயும் பெறுகிறார்.கிளைமாக்ஸ் காட்சியில் சூரியின் உழைப்பு நம்மளை நெகிழ செய்கிறது.கதாநாயகியாக வரும் பவானி ஸ்ரீ சூரிக்கு இணையாக நடித்து அசத்தியுள்ளார்.பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி குறைந்த நேரம் வந்தாலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடத்தினை பிடித்துவிட்டார்,அடுத்த பாகத்தில் இவருக்காக காத்திருக்கும் ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர் என்றே கூறலாம்.காவல் அதிகாரியாக வரும் சேத்தன் கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.உயர் காவல் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் வந்த பின்பு தான் படம் தாறுமாறாக உள்ளது.இளையராஜா பாடல்கள் மற்றும் இசை தேவையான இடத்தில் சிறப்பாக பொருந்தி இளையராஜா இளையராஜாதான் என்று சொல்ல வைக்கிறது.மொத்தத்தில் இப்படம் வெற்றிமாறனின் வெற்றிக்கு என்றுமில்லை விடுதலை என்பதை தெளிவாக காட்டியுள்ளது.

விடுதலை படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங்- 4/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment