முத்துகுமாருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை…உண்மையை கூறிய வித்யூலேகா

நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வித்யூலேகா ராமன்,நகைச்சுவை நடிகரான இவர் இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வர தொடங்கியது.அத்தனையும் பயன்படுத்தி நடிக்க தொடங்கினார் வித்யூலேகா.இவர் நடித்த படம் சரியாக ஓடுதோ இல்லையோ இவரது காமெடி காட்சிகள் நிறைய படங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.தமிழ் மொழி மட்டும் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கிலும் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார்.தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.வித்யூலேகா வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துகுமாருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை...உண்மையை கூறிய வித்யூலேகா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் உடல் எடை பருமன் ஆன இவர் தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் இவர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.இவர் அண்மையில் பிகினி உடை உடுத்திக்கொண்டு தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டார்,இது பெரும் விமர்சையாக பேசபட்டது,தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.பல விதமான உணவுகளை செய்து மக்களையும் நடுவர்களையும் ஆச்சரியப்படவும் செய்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

முத்துகுமாருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை...உண்மையை கூறிய வித்யூலேகா 2

விளம்பரம்

இந்நிலையில் குக் வித் கோமாளி இறுதி சுற்றில் நடந்த நிகழ்வு ஒன்று பற்றி விளக்கம் அளித்துள்ளார் வித்யூலேகா.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்த அவர்,திடீரென ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் முத்துக்குமாரை வெறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார்,அதனை கண்டு அதிர்ச்சி ஆகிய வித்யூலேகா,அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை,அவர் மிக சிறந்த குக்,அவர் இறுதி போட்டி செல்ல வேண்டியவர் இதனை நானே கூறி இருக்கிறேன்,கிரேஸ் அக்காவை உற்சாகப்படுத்தவே முத்துக்குமாருக்கு போட்டியாக பேசினேன் வேற ஒன்றும் இல்லை,இதுகுறித்து அவரிடம் நான் பேசிவிட்டேன் , அதற்கு அவர் நீ எவ்வளவு இயல்பானவள்,அதெல்லாம் ஒன்றும் கிடையாது என அண்ணன் கூறினார் என தெரிவித்துள்ளார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment