போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது.
இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.இவர் கூறிய கதையில் அஜித்திற்கு லைக்கா நிறுவனத்திற்கு திருப்தி இல்லை இதனால் இப்படத்தின் கதையினை மாற்ற இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தயாரிப்பு நிறுவனமும் அஜித்தும் 8 மாத கால அவகாசத்தினை கொடுத்துள்ளது,இதற்கிடையில் இவருக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் முடிந்தது,திருமணம் முடிந்த கையோடு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கதையில் எந்த மாற்றத்தினையும் செய்யாமல் மீண்டும் லைக்கா நிறுவனத்திடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவனை அஜித்தின் 62வது படத்தில் இருந்து நீக்கி புதிய இயக்குனரை லைக்கா நிறுவனம் தேடி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வந்தது.அதன்படி தற்போது இது உண்மை என்று கூறுவது போல விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில்AK62 என குறிப்பிட்டு இருப்பதை நீக்கியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளுடன் அஜித் படம் இருந்த நிலையில் அடுத்து யார் இயக்க உள்ளார் என ஆவல் வெளியாகியுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in