தமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் தன் மகள் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை அரங்கில் அமர்ந்து பார்த்த காட்சி இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.
இவர் தற்போது வெளிநாட்டில் உள்ள தன் மகள் திவ்யா டென்னிஸ் விளையாடுவதை அரங்கில் இருந்து பார்க்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அவர் தன் மகளை பெருமையுடன் பார்த்து ரசிப்பது ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. ஏற்கனேவே இவரது மகன் சஞ்சய் சினிமா துறையில் அறிமுகம் ஆக உள்ளார் என்று கடந்த சில நாட்களாக நாம் அறிந்ததே. இப்போது இவரது மகள் செய்யும் சாதனை இன்னும் இவரை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/969925328561848320
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in