லட்சக்கணக்கான ரசிகர்களுடன் SELFI எடுத்து மாஸ் காட்டிய தளபதி விஜய் – அரண்டுபோன தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

லட்சக்கணக்கான ரசிகர்களுடன் SELFI எடுத்து மாஸ் காட்டிய தளபதி விஜய் - அரண்டுபோன தமிழ் சினிமா 1

விளம்பரம்

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

லட்சக்கணக்கான ரசிகர்களுடன் SELFI எடுத்து மாஸ் காட்டிய தளபதி விஜய் - அரண்டுபோன தமிழ் சினிமா 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் மேடையில் தளபதி விஜய் தனது ரசிகர்கள் படையுடன் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கூடியிருந்த கூட்டத்தினை கண்டு தமிழ் சினிமாவே ஆட்டம் கண்டுள்ளது என்றே கூறலாம்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment