விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் ராமர்.இந்த நிகழ்ச்சியில் உள்ள உள்ள சிரிச்சா போச்சு என்ற சுற்றில் சக கலைஞருடன் வந்து நகைச்சுவை செய்து மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.பின்னர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை மாபெரும் வைரலாகியது.அன்று முதல் தற்போதுவரை ராமரை என்னம்மா ராமர் என்று தான் அழைத்து வருகிறார்கள்.மக்களை மகிழ்விக்கும் மகத்தான வேலையை ராமர் செய்வதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஆரம்பத்தில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்து இன்று இவர் இல்லாத நிகழ்ச்சியே தற்போது இல்லை என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டார்.தற்போது வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றார்.இவர் மனப்பாடம் பண்ணிட்டு வரும் வசனங்களை மறந்து இவர் அந்த இடத்திலேயே பேசும் வசனம் தான் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.அந்த அளவிற்கு நகைச்சுவை மன்னனாக விஜய் தொலைக்காட்சியில் உள்ளார்.
தற்போது இவர் புதிய வீடு ஒன்றை மதுரையில் கட்டியுள்ளார்.வீட்டின் புதுமனை புகுவிழாவை சில தினங்களுக்கு முன்பு நடத்தியுள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரோபோ சங்கர்,தங்கதுரை,நாஞ்சில் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.நாஞ்சில் விஜயன் ராமர் வீட்டை மக்களுக்கு சுற்றி காண்பித்து வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ராமரின் ரசிகர்கள் அவருக்கு மேலும் மேலும் வளர தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Embed video credits : MODERN MONKEY
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in