தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
விஜயகாந்த் பல மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.தற்போது அவர் உடல்நலம் சரி இல்லாத பொழுதும் மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறார்.இன்று புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களையும் தொண்டர்களையும் காண வருகை தந்தார்.அவரை சக்கர நாற்காலியில் வைத்து மகன் அழைத்துவந்தார்.உடல் முடியாத பொழுதிலும் கஷ்டப்பட்டு ரசிகர்களுக்கு கை அசைத்தார்.கை அசைத்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென கீழே விழா பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார் என கவலையடைந்துள்ளனர்.
Embed video credits : Thanthi TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in