நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான், மணிரத்தினம், சூர்யா, ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தற்போது அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
பட வேலைகளால் இருவரும் முதல் ஹனிமூன் சென்ற பொழுது விரைவாக நாடு திரும்ப வேண்டி இருந்தது.இதனால் படத்தின் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் தங்களது இரண்டாவது ஹனிமூனுக்காக சென்றுள்ளனர்.தற்போது விக்கியும் நயனும் ஜோடியாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு தங்களது விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.அங்கு இருவரும் சாலையில் நின்று ரொமேன்டிக் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in