கூட்டத்தில் நயன்தாராவை பார்த்து LOVE YOU சொன்ன நபரால் காண்டாகிய விக்னேஷ் சிவன்… வெட்கத்தில் சிவந்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கூட்டத்தில் நயன்தாராவை பார்த்து LOVE YOU சொன்ன நபரால் காண்டாகிய விக்னேஷ் சிவன்... வெட்கத்தில் சிவந்த நயன்தாரா 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் கனெக்ட் படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்

கூட்டத்தில் நயன்தாராவை பார்த்து LOVE YOU சொன்ன நபரால் காண்டாகிய விக்னேஷ் சிவன்... வெட்கத்தில் சிவந்த நயன்தாரா 2

விளம்பரம்

இப்படம் நாளை மறுநாள் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.இந்த சந்திப்பில் கூட்டத்தில் இருந்து நபர் ஒருவர் நயன்தாராவை பார்த்து லவ் யு மேம் என கூறியுள்ளார்.இதனால் ஒரு நிமிடத்தில் விக்னேஷ் சிவன் முகம் மாறியது.ஆனால் நயன்தாரா வெட்கத்தில் செம்ம அழகாக சிரித்து கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் நயன்தாரா வெட்கப்பட்டு சிரிப்பதை பார்த்து ரசித்து வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : KOLLY INFOS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment