உயிரே உறவே..கமல்ஹாசன் விக்ரம் ஆடியோ Launch…Promo-வை வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

உயிரே உறவே..கமல்ஹாசன் விக்ரம் ஆடியோ Launch...Promo-வை வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி 1

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா கடந்த 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் படக்குழுவுடன் கலந்துகொண்டு இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டனர்,ட்ரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ஜூன் 3 ஆம் தேதி உலகநாயகனின் விக்ரம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் உலகநாயகன் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்

உயிரே உறவே..கமல்ஹாசன் விக்ரம் ஆடியோ Launch...Promo-வை வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய உள்ளது.அதன்படி இந்த முழு நிகழ்ச்சியையும் மே 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.உலக நாயகன் ரசிகர்கள் இதனை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Vikram Audio Launch | 22nd May 2022 - Promo 1

விளம்பரம்

Embed video credits : vijay television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment