உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.படத்தினை பார்த்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் படங்கள் சரியாக ஓடவில்லை அதனை தற்போது விக்ரம் நிவர்த்தி செய்துள்ளது.இறங்கிய தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது விக்ரம் என தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது வரை படத்திற்கு டிக்கெட்டுகள் அணைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ்புல் ஆகி ஓடிவருகிறது .அந்த அளவிற்கு உலகநாயகன் படம் பெரும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது .இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் ரசிகர்கள் கேட்க கேட்க பத்தாமல் மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது இப்படம்,திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளது இந்த பாடல்.தற்போது இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
தற்போது இப்படம் பீஸ்ட் மற்றும் வலிமை வசூலை முந்தியுள்ளது.அதுவும் ஒரே வாரத்தில்.இது இவர்களது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தினை
ஏற்படுத்தியுள்ளது.இப்படம் வெளியாகிய நாள் முதல் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 230 கோடியை ஒரே வாரத்தில் வசூலித்து சாதனை செய்துள்ளது. இந்த வசூல் மூலம் விக்ரம் பீஸ்ட் மற்றும் வலிமை கலெக்ஷனை ஒரே வாரத்தில் முந்தியுள்ளது.இதனால் உலகநாயகன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.மீண்டும் உலகநாயகன் வந்துவிட்டார்,இனி தமிழ் சினிமா வேரலெவெல் செல்ல போகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.நாயகனாகவும்,தயாரிப்பாளராகவும் விக்ரம் வெற்றியை கமல் கொண்டாடி வருகிறார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in