உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கோலிவுட்டில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள்
அண்மையில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் பத்தலை பத்தலை பாடலுக்கு ஆண்டவர் இதில் போட்டுள்ள குத்தாட்டம் படத்தின் எதிர்பார்ப்பினை கூடுதலாக்கியுள்ளது.இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.அதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிகளின் முன்பதிவு பல திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.அந்தளவிற்கு எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது விக்ரம்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு ஆங்கில பாடல் வைத்துள்ளதை போல இப்படத்திலும் கமல்ஹாசனுக்கு ஒரு ஆங்கில பாடலை வைத்துள்ளார் லோகேஷ்.இந்த Wasted Lyric எனும் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடல் வீடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாபாத்திரம் குடிக்கு அடிமையானவர் போல காட்டியுள்ளனர்.24 மணி நேரமும் போதையில் இருப்பது போல தான் இந்த பாட்டு அமைந்துள்ளது.முன்னதாக லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் விஜய் இதுபோன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்,தற்போது கமல்ஹாசனையும் இதுபோல தான் காட்டியுள்ளனர்,இதனால் மாஸ்டர் படத்தில் முதலில் குடிக்கு அடிமையான விஜய் குடியை நிறுத்தி எதிரிகளை அழிப்பது போல,ஆண்டவரும் அதேதான் செய்வாரோ ,கதையும் ஒரே மாதிரிதான் வருமோ என இந்த பாடலை பார்க்கும் பொழுது குழப்பமடைய செய்துள்ளது
Embed video credits : sony music
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in