நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கையுள்ளார்.கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.படத்தில் மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ததா என்பதை வாங்க பார்க்கலாம்
கதைக்களம்
வில்லன் ஆக வரும் விஜய் சேதுபதி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்பவர்.விஜய் சேதுபதியின் போதை பொருளை சீக்ரெட் ஏஜென்ட்டாக ஆன காளிதாஸ் ஜெயராம் கைப்பற்றி கெட்டவர்கள் இடத்தில் கிடைக்காமல் அதனை பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கிறார்.படத்தில் காளிதாஸ் கமல்ஹாசன் மகனாக நடித்துள்ளார்.இதனை தெரிந்துகொண்ட விஜய் சேதுபதி காளிதாஸை கொன்று விடுகிறார்.இதற்கு பழி வாங்கவும்,போதை பொருள் யாருக்கும் இனி கிடைக்கவும் கூடாது என மறைந்திருந்து எதிரிகளை துவம்சம் செய்து வருகிறார் கமல்.இதில் விழும் கொலைகள் குறித்து ஆய்வு செய்ய பகத் பாசில் வருகிறார்.இவர்கள் மூவருக்கும் இடையே என்ன பிரச்சனை வருகிறது.போதை பொருளை விஜய் சேதுபதி எடுத்துவிட்டாரா,கமல்ஹாசன் மகன் சாவுக்கு எவ்வாறு பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதி கதை ஆகும்.
படவிமர்சனம்
கமல்ஹாசன் திரையில் தோன்றும் ஒவ்வொரு நொடியும் அடித்து துவைத்து வருகிறார்.ஆக்ஷன்,செண்டிமெண்ட் மற்றும் துப்பாக்கிகளை உபயோகப்படுத்தும் விதம் என ஒவ்வொரு செயலுக்கும் கைதட்டுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்.இண்டர்வெல் காட்சியில் கமலின் நடிப்பு அனைவரையும் மிரட்டி எடுத்து விடுகிறது.வில்லனாக வரும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தினை கரைத்துக்குடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.சில காட்சிகளில் அவரை பார்க்கும் நமக்கே பயம் வந்துவிடுகிறது அந்தளவிற்கு தரமான வில்லன் ஆக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் அனிருத் இசை படத்தின் கூடுதல் உயரத்திற்கு எடுத்து சென்றுள்ளது,தேவையான இடங்களில் சரியாக மியூசிக்கை போட்டு பார்ப்பவர்களை வெறி ஏத்தியுள்ளார்.நரேன், காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.வெறித்தனமான திரைக்கதையில் கமலஹாசனை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.கடைசியாக வந்த சூர்யா திரையரங்கை அதிர செய்துள்ளார்.படத்தினை கைதியின் தொடர்கதையாக எடுத்து கைதி 2வில் சிறப்பான தரமான சம்பவத்தினை செய்ய உள்ள லோகேஷ் ,இதனை காண ரசிகர்களும் ஆவலாக .காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் விக்ரம் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா போல் ரசிகர்களின் நெஞ்சுக்குள் புகுந்தது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in