தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி.இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார் கார்த்தி.பின்னர் தொடர்ந்து தமிழில் வித்தியாசமான படங்களில் நடித்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை தனது வசம் சேர்த்தார்.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கொம்பன்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.பருத்திவீரன் படத்திற்கு பிறகு கிராமம் சார்ந்த படம் கொம்பன் என்பதால் பெரும் வரவேற்பினை பெற்றது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சுரேஷ் ,சூரி,மைனா நந்தினி,ராஜ்கிரண் என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டு ரசிகர்கள் படத்தினை கண்டு களித்து வருகின்றனர்
படத்தின் கதை
கார்த்தியின் அம்மாவான சரண்யா பொன்வண்ணன் கார்த்தி கண் முன்னே தீயில் எரிந்து சாகிறார்.இதனை கண்ட கார்த்தி தனது அம்மாவின் சாவுக்கு அப்பா பிரகாஷ் ராஜ் தான் காரணம் என அவர் மீது கடும் கோபத்தில் கொலை முயற்சிவரை செய்கிறார்.இந்நிலையில் கார்த்திக்கு தாய்மாமனாக வரும் ராஜ்கிரண் எங்கே மருமகன் வாழ்க்கை வீணாகிவிடுமோ என அவரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையை சந்திக்கும் கார்த்தி அவர் மீது அதே கோபத்தில் உள்ளார்.இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனது மூன்று பிள்ளைகளுக்கு எதுவும் செய்யாமல் தன்னை மட்டும் நம்பி இருக்க வேண்டும் என நினைக்கிறார்.தனது அண்ணன்களை தந்தை பிரகாஷ் ராஜிடம் இருந்து மீட்க போராடுகிறார் கார்த்தி.அண்ணன்களை மீட்டெடுத்தாரா இந்த போராட்டத்தில் கார்த்தி என்னென்ன துன்பங்கள் படுகிறார் ,தந்தையின் மேல் உள்ள கோபம் தணிந்ததா என்பதே படத்தின் மீதமுள்ள கதை ஆகும்.
படத்தை பற்றி அலசல்
வழக்கம் போல கிராமத்து நாயகனாக வந்து அசத்தி எடுத்துள்ளார் கார்த்தி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று உள்வாங்கி அப்படியே நடித்து கொடுப்பதில் இவர் கில்லாடி என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.படத்தில் நடிப்பு,காதல்,ஆக்ஷன் என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி.பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கிறார் ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும்.கதாநாயகியாக வரும் அதிதி சங்கர் தனது முழு உழைப்பையும் படத்தில் அளித்துள்ளார்.நடனத்தில் நல்ல பெயரை ரசிகர்களிடம் பெற்றுள்ளார் அதிதி.படத்தில் கூடுதகில் பலமாக அமைந்தது ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி இவர்கள் நடிப்பு நச்சென அமைந்துள்ளது.அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ் பற்றி கேட்கவா வேண்டும் ,சும்மாவே நடிப்பில் பிரித்தெடுப்பார் தற்போது நெகட்டிவ் கதாபாத்திரம் கலந்து கார்த்திக்கு இணையாக அடித்து ஸ்கோர் செய்துள்ளார்.ஆர்கே சுரேஷ் தனது பங்கினை சிறப்பாக அளித்துள்ளார்.சூரி நகைச்சுவை ஓரிரு இடங்களில் ஓகே ஆகியுள்ளது.யுவன் பின்னணி இசை மற்றும் பாடல் படத்திற்கு கூடுதல் பலத்தினை அளித்து படத்தினை முழுமையடைய செய்துள்ளது.
பட விமர்சனம்
படத்தில் கொம்பன் படத்தின் சாயல் அதிகம் வந்துள்ளது அது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.மேலும் பல படங்களில் இந்த கதையை பார்த்திருக்கிறோம்.புதுசாக எதையும் எடுக்கவில்லை ,முதல் பாதி நீளத்தினை குறைத்திருக்கலாம்.இவ்வளவு நீளமான முதல் பாதி படம் பார்க்க வந்தவர்களை எரிச்சலூட்டியது என்று தான் கூறவேண்டும்.நல்ல நடிகர் ஆர்கே சுரேஷை இப்படத்தில் சண்டைக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளது சோதனையே. முத்தையாவின் இயக்கம் சரியாக படத்தில் அமையவில்லை காரணம் தொடர்ந்து சண்டை காட்சிகளும்,சரியான வசனங்களும் படத்திற்கு அமையாதது பெரும் பின்னடைவை படத்திற்கு கொடுத்துள்ளது எனலாம்.கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அதிதி நடிப்பில் ஓரளவு ஓகே என்றாலும் நடனத்தில் தூள் கிளப்பியுள்ளார்.வழக்கமான முத்தையா படங்களை போல் இது இல்லை
இப்படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் அளிக்கும் ரேட்டிங் – .2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in