தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தன் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதை கருத்தும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னை நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு. விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்பிட்டுளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர்.
இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். இந்நிலையில் இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு அரசியல் பிரமுகர்களிலிருந்து சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Dear style lovers!! My style of wishing @rajinikanth the superstar on bagging the #DadasahebPhalkeAward 👏🏻 pic.twitter.com/3vJMPh1K7r
— Vivekh actor (@Actor_Vivek) April 1, 2021
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை பாராட்டும் விதமாக விவேக் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in