அட்ஜெஸ்மென்ட் கேட்குறாங்க பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா பரபரப்பு புகார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்.இந்த தொடரில் மக்களிடம் மிக வரவேற்பினை பெற்ற கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா.இந்த கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வருகிறார்.ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறிய தீபிகா தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.இவரின் வருகை இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது காரணம் அந்தளவிற்கு நடிப்பினால் மக்கள் மனதை கொள்ளைகொண்டிருந்தார்.

அட்ஜெஸ்மென்ட் கேட்குறாங்க பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா பரபரப்பு புகார் 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இரண்டாக பிரிந்து உள்ளது.இதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா தான்.தற்போது குடும்பத்தை பிரித்து கண்ணனையும் தனியாக அழைத்து சென்றுள்ளார்.நாளுக்கு நாள் தொடரின் சுறுசுறுப்பும் வேகமும் கூடிக்கொண்டே இருக்கிறது.இந்நிலையில் விஜே தீபிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த நிகழ்வு ஒன்றை பற்றி கூறியுள்ளார்.

அட்ஜெஸ்மென்ட் கேட்குறாங்க பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா பரபரப்பு புகார் 2

விளம்பரம்

ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க கூறி ஆடிஷனுக்கு அழைத்தனர்.அப்பொழுது அங்கு என்னை மட்டும் ஒரு அறையில் அமர வைத்து படத்தில் உங்கள் ரோலுக்கு ஒரு முத்த காட்சி உள்ளது அதனை செய்து காண்பிக்குமாறு கூறினார்கள்.இதில் நடிக்க மாட்டேன் வேறு ரோல் இருந்தால் கொடுங்கள் என கேட்டதற்கு,இதற்கு முன் 8 பெண்கள் வந்து முத்தம் கொடுத்துள்ளனர்,உங்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.இப்படி வெளிப்படையாகவே வாய்ப்பிற்கு அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment