ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தான் தொகுத்து வந்தார், யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர். பிரியங்கா தந்தை புகைப்படம் கீழே உள்ளது
மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்தார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கட்டாயம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தினார் பிரியங்கா.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.இவரின் இந்த வீடியோவை காண்பதற்கே பல லட்சம் மக்கள் உள்ளனர்.தொகுப்பாளர் துறையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவர் முன்னோடியாக உள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினை பற்றி பேசி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிரியங்கா அவரது அம்மாவின் முழு அரவணைப்பில் வளர்த்துள்ளார்.அவர்கள் அம்மா தனியாளாக நின்று இவரையும் இவரது தம்பியையும் வளர்த்துள்ளார்.இவர் கூறிய கதை பல ரசிகர்களின் மனதினை வெகுவாக கரைத்தது.தற்போது பிரியங்கா சிறுவயதில் அவர் தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in