Wild Card – என்ட்ரியாக உள்ள போகும் ஓவியா மற்றும் பரணி? | Bigg Boss Ultimate

24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் வண்ணம் பிக் பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்கி உள்ளது. பிக் பாஸ் தமிழ் தொடரின் முந்தைய சீசன்களில் போட்டியிட்டவர்கள், பிக் பாஸ் அல்டிமேட் டிஜிட்டல் பதிப்பின் முதல் சீசனில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். 1 முதல் 5வது சீசன் வரையிலான போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், வெற்றி பெற்றவர்கள் இந்தப் பதிப்பில் பங்கேற்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிக் பாஸ் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. இந்த ஐந்து சீசன்களுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளராகத் தொடர்ந்தார். முதல் சீசன் 25 ஜூன் 2017 அன்று தொடங்கியது, சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் 3 அக்டோபர் 2021 அன்று தொடங்கி ஜனவரி 16, 2022 நிறைவடைந்தது.

Wild Card - என்ட்ரியாக உள்ள போகும் ஓவியா மற்றும் பரணி? | Bigg Boss Ultimate 1

விளம்பரம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், சுஜா வருணி, நிரூப், அபிநய், ஸ்ருதி, தாமரை, பாலாஜி முருகதாஸ். சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். ஓவியா ஆர்மி என்ற ஒரு கலாச்சாரமே இவரால் உருவாக்கப்பட்டது. ஆரவ் கூட ஏற்பட்ட காதல் முறிவால் அப்போது நீச்சல் குளத்துல விழுந்து தற்கொலை முயற்சி செய்தாங்க. அதுனால வெளியே அனுப்பப்பட்ட ஓவியா பிக் பாஸ் அல்டிமேட்-ல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. Youtube Video embed code credits: Galatta Tamil

Wild Card - என்ட்ரியாக உள்ள போகும் ஓவியா மற்றும் பரணி? | Bigg Boss Ultimate 2

விளம்பரம்

ஆனால் ஓவியாவிற்க்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் தீயாக பரவி கொண்டு உள்ளது. தனியார் ஹோட்டலில் தனிமையில் இருக்கும் ஓவியாவிற்கு உடல்நலம் சரியானால் மட்டுமே அவர் உள்ளே அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதே போல் பரணி அவர்களும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் wild card என்ட்ரி ஆக உள்ளே செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.Watch the below video..

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment