சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.
இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய்.
பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.
இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை எடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கினார்.
அண்மையில் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் .தற்போது இவர்களுக்கு மகன் பிறந்து உள்ளார். தனது குழந்தையை ரசிகர்களிடம் காண்பித்துள்ளார் விஜய்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in