யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் இவர் இளையராஜா இசையில் வெளியாகிய நிலா அது வானத்து மேலே என்ற பாடலுக்கு செம்மையாக ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை யுவன் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.யுவன் ஆடுவதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தும் உள்ளனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in