சமீபகாலமாக வைரலாக பரவி வரும் செய்தி ஸொமேட்டோ ஊழியர் ஒருவர் பெண்ணை மூக்கில் காயப்படுத்தியதாக வெளியிட்ட பதிவு. பெங்களூரை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஹிதேஷா சந்திரனி என்ற பெண் ஸொமேட்டோவில் ஆர்டர் செய்துள்ளார். அதை டெலிவரி செய்ய வந்த காமராஜ் என்னும் ஸொமேட்டோ ஊழியர் தன்னை மூக்கில் காயப்படுத்திவிட்டு சென்றதாகவும் மூக்கில் ரத்தம் வடிய அந்த பெண் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த ஊழியரை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்றும் , சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பல எதிர்ப்புகள் எழுந்தது.
இந்நிலையில் காமராஜ் என்ற ஊழியரை ஸொமேட்டோ நிறுவனம் வேலையை விட்டு தூக்கியது மட்டுமில்லாமல், காவல் துறை அவரை சிறையில் அடைத்தது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தன் மீது குற்றமில்லை,சாப்பாடு டெலிவரி செய்ய காலதாமதமானதால் அந்த பெண் தன்னை செருப்பால் அடித்ததாகவும் அதை தடுக்க சென்ற பொது தான் அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.
அந்த பதிவை கண்ட பிறகு காமராஜிற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது மக்கள் மட்டுமில்லாது பல பிரபலங்களும் இந்த சம்பவத்தை குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது இது குறித்து பிரபல பாலிவுட் நடிகை பரிணீத்தி சோப்ரா காமராஜிற்கு ஆதரவாக தன் ட்விட்டர் பதிவில் ட்வீட் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் , சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்த தெலுங்கு நடிகை பிரணிதா சுபாஷ் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உண்மை என்ன என்பதை அறிந்து அந்த ஊழியர் பக்கம் நியாயம் இருந்தால் உடனடியாக சரியான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in