அடப்பாவி இப்படியா பண்ணுறது….KGF2 பார்த்து 15வயது சிறுவன் செய்த காரியத்தால் உயிரிழக்கும் நிலைக்கு சென்ற சோக சம்பவம்

விளம்பரம்
விளம்பரம்

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.கன்னடத்தில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகம் ஆக்கியது.அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.உலகம் முழுவதும் சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு....வனிதா விஜயகுமார் ஆவேசம்

அடப்பாவி இப்படியா பண்ணுறது....KGF2 பார்த்து 15வயது சிறுவன் செய்த காரியத்தால் உயிரிழக்கும் நிலைக்கு சென்ற சோக சம்பவம் 1

விளம்பரம்

இப்படம் சண்டை பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது போல ரசிக்க வைத்தது.இந்த படத்தினை பார்த்து சிறுவன் ஒருவர் செய்த செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை கேஜிஎப் 2 படத்தினை பார்த்திருக்கிறார்.கேஜிஎப் யாஷ் மீது கொண்ட அதிக ஈர்ப்பினால் அவரைப்போல முழு சிகரெட் பாக்கெட்டையும் ஒரே நேரத்தில் புகைத்துள்ளார்.இதனால் சிறுவனுக்கு தொண்டை வலி ஏற்பட்டு,மூச்சுத்திணறல் ஆகி ஆபத்தான நிலையில் ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்த மூஞ்சி எங்க சொந்த வீடு கட்டப்போகுதுன்னு சொன்னாங்க...இதுதான் நான் கட்டும் சொந்த வீடு-அறந்தாங்கி நிஷா

அடப்பாவி இப்படியா பண்ணுறது....KGF2 பார்த்து 15வயது சிறுவன் செய்த காரியத்தால் உயிரிழக்கும் நிலைக்கு சென்ற சோக சம்பவம் 2

விளம்பரம்

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ கூறியதாவது,சிறுவன் ஒரே நேரத்தில் முழு சிகரெட் பாக்கெட்டையும் புகைத்துள்ளதால் கடுமையாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது,தற்போது நலமாக உள்ளார்.நடிகர்கள் தங்களது படங்களை குழந்தைகளும் பார்ப்பார்கள் என எண்ணி சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுப்பது படம் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,அதேபோல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.சிறுவன் செய்த இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment