பிரபல தமிழ் நடிகரை மணக்கிறார் நிக்கி கல்ராணி..நிச்சயம் முடிஞ்சிடுச்சு | Nikki Galrani

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ரகசியமாக நிச்சயம் ஆகிவிட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் சில நாட்களுக்கு முன்பே கிசுகிசுக்கப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இணைந்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற தகவல் பரவிய நிலையில் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும், தேதியை பின்னர் அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிச்சயதார்த்தம் குறித்த ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. இதில் அவர்களுடைய தெலுங்கு நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிரபல தமிழ் நடிகரை மணக்கிறார் நிக்கி கல்ராணி..நிச்சயம் முடிஞ்சிடுச்சு | Nikki Galrani 1

விளம்பரம்

நடிகர் ஆதி மற்ற நடிகர்களைப் போல அல்லாமல் சற்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். மிருகம், அரவாண், ஈரம்,மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர். வழக்கமான கதைகள் இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பார் ஆதி. சமீபகாலமாக தமிழில் படவாய்ப்புகள் குறையவே தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் ஆதி. அதே போல் நிக்கி கல்ராணி கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் தமிழில் ஜி.வி.பிராகஷுடன் இணைந்து “டார்லிங்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து யாகவராயினுன் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதியுடன் இணைந்து நடித்துள்ளார். இது தவிர் கோ 2, மொட்ட சிவா, கெட்ட சிவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. YouTube video code embed credits: little talks

பிரபல தமிழ் நடிகரை மணக்கிறார் நிக்கி கல்ராணி..நிச்சயம் முடிஞ்சிடுச்சு | Nikki Galrani 2

விளம்பரம்

 

இந்த நிலையில் மரகத நாணயம் படத்தில் ஆதி நிக்கி கல்ராணி இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என அப்போதே சொல்லப்பட்டது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் ஆதி வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டிருந்தது அந்த கிசுகிசுப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது என்றும் இந்த வருட இறுதியில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து இருவரும் மறுக்கவும் இல்லை, ஒத்துக் கொள்ளவும் இல்லை. இருவரும் தங்கள் திருமணத்தை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment