ஹாப்பி பர்த்டே புருஷா..! நள்ளிரவில் அபிநய் மனைவி கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் | Abhinay Vaddi

அபிநய் பிறந்தநாளை அவரது மனைவி அபர்ணா சப்ரைஸ் ஆக பெரிய ஹோட்டலில் வைத்து கொண்டாடியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிநய் வட்டி! இவர் மறைந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் ஆவார். வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே விளையாட்டில் குறைந்த ஆர்வத்துடன் இருந்தது மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது! ஒவ்வொரு முறையும் வெளியேற்று படலத்தில் தேர்வாகினாலும் ஒவ்வொரு முறையில் தப்பித்துக்கொண்டே வந்ததால் மக்கள் கடும் கோபத்திலும் இருந்தனர்.கடைசியாக ஒரு நாள் இவரும் வெளியேற்றப்பட்டார்.

ஹாப்பி பர்த்டே புருஷா..! நள்ளிரவில் அபிநய் மனைவி கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் | Abhinay Vaddi 1

விளம்பரம்

மீண்டும் இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது வாரம் இரட்டை வெளியேற்றத்தில் ஷாருக் மற்றும் அபிநய் ஆகிய இருவரும் வெளியேறினர். வெளியேறிய பின் இவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அதில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அது மாதிரி ஒன்றும் இல்லை ஏன் இவ்வாறு வதந்தி பரப்புகிறீர்கள் என்று கோபமாக கூறியிருந்தார்.

ஹாப்பி பர்த்டே புருஷா..! நள்ளிரவில் அபிநய் மனைவி கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் | Abhinay Vaddi 2

விளம்பரம்

 

இந்த நிலையில் அவரது மனைவி அபர்ணா அபிநய் பிறந்தநாளை முன்னிட்டு மிக பெரிய சப்ரைஸ் கொடுத்துள்ளார். அதில் ஆரி, சோம், சிபி, வனிதா, ஐக்கி பெர்ரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோரை அழைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அபிநய் மற்றும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆக போகிறது என்றெல்லாம் வதந்தி பரவி வந்த நிலையில் இன்று அவரது மனைவி அபிநய் க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளது வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் போல் உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment