The Indian Times

அபிநய் பெயரை தூக்கிய மனைவி அபர்ணா! பாவனியால் ஏற்பட்ட பிரிவா? வைரலாகும் வீடியோ! Abhinay Wife BreakUp?

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிநய் வட்டி! பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே கமல் ஹாசன் அபிநய் அம்மா எனக்கு தங்கை மற்றும் அபிநய்க்கு நான் தாய்மாமன் முறை என்றும் அன்போடு விளையாட அனுப்பி வைத்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து சாதனை படைத்த இவருக்கு வாய்ப்புகள் வாசலை தேடி தட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்! சென்னை 28 பாகம் 2 போன்ற படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் நிரந்தர அங்கீகாரம் கிடைக்க எண்ணியே பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் வந்தார். ஆனால், வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே விளையாட்டில் குறைந்த ஆர்வத்துடன் இருந்தது மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது! ஒவ்வொரு முறையும் வெளியேற்று படலத்தில் தேர்வாகினாலும் ஒவ்வொரு முறையில் தப்பித்துக்கொண்டே வந்ததால் மக்கள் கடும் கோபத்திலும் இருந்தனர்.

Advertisement

அபிநய் வெளியேறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இமான் அண்ணாச்சி வெளியேறியது மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது! இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்னதான் இவர் அனைவரிடமும் அன்பு மழை பொழிந்தாலும் பாவனியிடம் காதல் மழை பொழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த கேள்வியை புறக்கணித்து கொண்டே வந்ததால் மக்களுக்கும் அந்த சந்தேகம் அதிகம் எழுந்தது! ஆனால் சம்மந்தப்பட்ட பாவனியும் அபிநயும் பதிலளிக்காமல் தள்ளிப்போட்டு வீட்டில் உள்ளவர்களையும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும் குழப்பி வந்ததால் கமல் முன்பு குறும்படம் போட்டு விளக்கி தவறு யார் பக்கம் என நிரூபித்தனர்! அதற்கு பிறகு பாவனி அபிநய்க்கு நடுவே பிரிவு அதிகமானது!

Advertisement

இறுதியில் பேசாமலேயே வீட்டில் இருந்து வெளியேறவும் செய்தார்! வீட்டிற்குள் இருந்த வாரங்களில் விளையாடாமல் கடைசி வாரத்தில் விளையாடியது உபயோகம் இல்லாமல் போனது! இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் எந்த பேட்டியும் மக்களுக்கு கொடுக்கவில்லை என்றாலும் பாவனி விஷயத்தில் கடும் கோபத்தில் இருப்பதாக அறியப்படுகிறது! சமீபத்தில் இவர் மனைவி அபர்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பெயருக்கு பின்னால் உள்ள அபிநயை தூக்கி விட்டு தன்னுடைய தந்தை பெயரை வைத்துள்ளார்! அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த பதிவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

https://www.youtube.com/watch?v=52OZpaRmqQg

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in