The Indian Times

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி….தீவிர சிகிச்சை

இலங்கையை சேர்ந்த போண்டாமணி சினிமாவில் நடிக்க வேண்டும் என தீவிரமாக வாய்ப்பு தேடி வந்த நிலையில் அவருக்கு பாக்யராஜ் படத்தில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.வடிவேலு உடன் கூட்டணி சேர்ந்து நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

Advertisement

இவர் நடித்த படங்களிலில் குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு உண்டு.அதேபோல் சந்தானத்துடனும் இணைந்து நடித்துள்ளார்.தனது காமெடியினால் மக்களை சிரிக்க வைத்து சினிமாவில் தனி ஒரு இடத்தினை பிடித்தார் போண்டா மணி.இன்று வரை இவர் வடிவேலு,சந்தானத்துடன் இணைந்து செய்த காமெடி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இன்று நடிகர் போண்டாமணி இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த செய்தி சினிமா நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.மக்களை மகிழ்வித்த கலைஞன் மீண்டு வர அனைவரும் பிரார்த்திப்போம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in