The Indian Times

எனக்கு ஓடி வந்து விஜய் சேதுபதி காசு கொடுத்தாரு…போண்டாமணி கண்ணீர் மல்க நன்றி

இலங்கையை சேர்ந்த போண்டாமணி சினிமாவில் நடிக்க வேண்டும் என தீவிரமாக வாய்ப்பு தேடி வந்த நிலையில் அவருக்கு பாக்யராஜ் படத்தில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.வடிவேலு உடன் கூட்டணி சேர்ந்து நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த படங்களிலில் குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு உண்டு.அதேபோல் சந்தானத்துடனும் இணைந்து நடித்துள்ளார்.தனது காமெடியினால் மக்களை சிரிக்க வைத்து சினிமாவில் தனி ஒரு இடத்தினை பிடித்தார் போண்டா மணி.இன்று வரை இவர் வடிவேலு,சந்தானத்துடன் இணைந்து செய்த காமெடி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.

Advertisement

தற்போது போண்டா மணி இரண்டு கிட்னியும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வெளியிட்டு இருந்தார்.இதனை பார்த்த விஜய் சேதுபதி போண்டா மணியின் வங்கி கணக்குக்கு 1 லட்சம் ரூபாய் உடனே அளித்துள்ளார்.இதற்கு போண்டாமணி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in