The Indian Times

மறைந்தார் மயில்சாமி… நல்ல மனிதரை இழந்த சோகத்தில் தமிழ் சினிமா

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி.சினிமா மீது கொண்ட ஆசையால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார். இவர் பட்ட கஷ்டத்திற்கு பலனாய் 1984ஆம் ஆண்டு வெளியாகிய தாவணி கனவுகள் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.இவர் நடிகர் மட்டும் இல்லை மிமிக்ரி,தொகுப்பாளர்,சமூக சேவகர் என பல முகங்களை கொண்டுள்ளவர் மயில்சாமி.இன்று வரை இவரது காமெடிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

1988 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் வெற்றிவிழா,அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜ் படத்தில் நடித்திருந்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் இணைந்து பணக்காரன் உழைப்பாளி படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இவர் விஜயகாந்த்,சத்யராஜ்,விஜய் ,அஜித்,லாரன்ஸ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார்.தனது தனித்துவமான காமெடியினால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர்.இவ்வாறு மக்களை சிரிக்க வைக்கும் பணியினை செய்துகொண்டிருந்த மயில்சாமி இன்று இயற்கை எய்தியுள்ளார்

Advertisement

இன்று அதிகாலை 3:30 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்,அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி தமிழ் சினிமா நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.யோகி பாபு,ரமேஷ் கண்ணா,மனோபாலா ஆகியோர் மயில்சாமி மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in