The Indian Times

அதுக்காக இப்படியா பண்றது!!!மைக்கை தூக்கி ஏன் எறிந்தார் பார்த்திபன்?இதான் காரணமா…?

இயக்கம் நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன்.இவர் நேற்று பொது மேடையில் செய்த செயல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.மேலும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது இவர் இரவின் நிழல் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டதால் இந்த படம் ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது.இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆவார்.இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக் வேலை செய்யாததால் ஆத்திரத்தில் அதனை ரஹ்மான் முன்பே விட்டெறிந்தார்.இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகியது.

Advertisement

இந்த நிகழ்வுக்கு பார்த்திபன் மன்னிப்பு கோரியுள்ளார்,பட நிகழ்ச்சி நன்றாக முடியவேண்டும் என்று அழுத்தத்தில் இருந்ததாலும் மேலும் கையில் சுளுக்கு பிடித்துள்ளது,இதனால் மைக்கும் கையில் வேலை செய்யவில்லை என்பதால் டென்சன் ஆகிவிட்டேன்,நிகழ்வுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.இருப்பினும் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்துதான் வருகின்றனர்.

https://youtu.be/Eo4QwnLTkwU

video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in