The Indian Times

நடிகர் பூ ராமு உடல் நலக்குறைவால் காலமானார்….

2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய பூ படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ராமு.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்றதால் பூ ராமு என அழைக்கப்பட்டார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நீர்ப்பறவை,தங்கமீன்கள்,பரியேறும் பெருமாள்,பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று என பல படத்திலும் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வராக இவர் நடித்து பேசிய வசனம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.மேலும் இணையத்திலும் வைரலாகியது.அதேபோல் சூரரைப்போற்று படத்திலும் சூர்யாவிற்கு தந்தையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.தற்போது இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிக பூ ராமு காலமானார்.இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இவர் நடித்த படங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவர் பேசிய வசனம் அனைவரையும் யோசிக்கவும் சிந்திக்கவும் செய்தது.எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.இந்த செய்தியை கேட்டறிந்த ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் பூ ராமுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.தமிழ் சினிமா மேலும் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.அவரின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in