The Indian Times

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரிடமும் கேள்வி கேட்பேன் – நடிகர் பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் என்றாலே முதலில் நமக்கு நினைவு வருவது செல்லம் மற்றும் தனலட்சுமி என் சாமிடி என்ற கில்லி படத்தின் வசனங்கள் தான்,தனது நடிப்பினால் கதாநாயகனுக்கு இணையாக தனக்கு ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்தவர் பிரகாஷ் ராஜ்.இவர் கன்னடப்படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.இவரின் முதல் தமிழ் படம் டூயட்.இப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகியது.

Advertisement

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரகாஷ் ராஜ்,தனக்கான வாய்ப்பிற்காக காத்திருந்த பிரகாஷ் ராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப்படம் தான் ஆசை,இப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.இப்படத்திற்கு பின்னர் இவர் நடித்த அப்பு படம் ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது.இங்கிருந்து அப்படியே தெலுங்கு சினிமாவிலும் கால்தடம் பதித்து நல்ல படங்களை கொடுக்க தொடங்கிவிட்டார் பிரகாஷ் ராஜ்.

Advertisement

தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ்,அதில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் ஆனால் நான் அவரிடமும் கேள்வி கேட்பேன், என்டிஆர் ,எம்ஜிஆர் காலமெல்லாம் வேறு,சினிமா பிரபலம் அரசியலில் உதவாது என கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in