நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும்…நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ராசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக BOWLING போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..அரண்டு போன BATSMAN

நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும்...நீதிமன்றம் அதிரடி உத்தரவு 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் நடிகர் சந்தானத்தினை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இந்த தகவலால் இவர் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  நண்பா வரட்டுமா..யானைக்கு டாட்டா போட்ட நடிகர் யோகி பாபு

நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும்...நீதிமன்றம் அதிரடி உத்தரவு 2

விளம்பரம்

சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு திருமண மண்டபம் கட்டுவதற்கு சண்முகசுந்தரம் என்ற கான்டிரேக்டருக்கு 3 கோடி ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார்,ஆனால் பணத்தினை வாங்கிவிட்டு காண்டிராக்டர் கட்டிடத்தினை முடிக்காமல் இழுத்தடித்துள்ளார்.இந்நிலையில் ஒப்பந்தமும் முடிந்து போக,சந்தானம் கொடுத்த பணத்தினை கேட்டுள்ளார்,அவர் பணத்தினையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.இந்த பண கொடுத்தல் பிரச்சனைகளில் நடிகர் சந்தானம் சண்முக சுந்தரத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சண்முகசுந்தரம் சந்தானத்தின் மீது புகார் அளித்தார்,இந்த புகார் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.இதனால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment